மீசோரில் மியன்மர் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது – 6 பேர் படுகாயம்..!

2 Min Read

மிசோரம் அருகே மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

மிசோரம் அருகே அய்ஸ்வால், ஆயுதமேந்திய குழுவுக்கு பயந்து, மிசோரமுக்கு தப்பி வந்த, நம் அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த, 276 ராணுவ வீரர்கள் மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். மியான்மரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, ஆயுதங்களுடன் ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான மிசோரம், மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

மீசோரில் மியன்மர் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது

சர்வதேச எல்லையில், மியான்மர் ராணுவத்தினரின் முகாம்களை ஆயுதமேந்திய கும்பல் கைப்பற்றுவதால், அவர்களுக்கு பயந்து, அந்நாட்டு ராணுவ வீரர்கள் எல்லை வழியாக மிசோரமுக்குள் தப்பி வருகின்றனர். இதன்படி எல்லையில் உள்ள மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தின் பாண்டுக்பங்கா கிராமத்திற்கு, கடந்த 17-ம் தேதி 276 ராணுவ வீரர்கள் தப்பி வந்தனர் இவர்கள் அனைவரும், அசாம் ரைபிள்ஸ் படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் லெங்புய் விமான நிலையத்தில் இருந்து, மியான்மரின் ராக்கைன் மாநிலத்துக்கு, அந்நாட்டின் விமானம் வாயிலாக, 276 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுவரை மியான்மரில் இருந்து, 635 வீரர்கள் மிசோரமுக்கு தப்பி வந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஏராளமானோர் நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவுவது, உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது.

6 பேர் படுகாயம்

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவ வீரர்கள், இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் இவர்களை மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர். இந்த ராணுவ விரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் தரை இறங்கியது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்திக்குள்ளானது.

Share This Article
Leave a review