திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி வாழ்த்துகள் – முதலமைச்சர்

1 Min Read
முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக்குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம்.

புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் யுகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
1 Review