- புதுச்சேரியை உலுக்கிய முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த முதியவர் விவேகானந்தன் மற்றும் வாலிபர் கருணாஸ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்து, கொல செய்து சடலதை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடைக்குள் வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதே பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் போராட்டக்களமாக மாற்றியது.
முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். புதுச்சேரி, தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்ற முதியவரும், கருணாஸ் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கஞ்சா மற்றும் மது போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதன்பிறகு கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.
அதையடுத்து சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அதேபோல குற்றவாளிகளுக்காக நாங்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என்று அறிவித்தனர் புதுச்சேரி வழக்கறிஞர்கள். அதையடுத்து, `விரைவு நீதிமன்றத்தில் ஆறே மாதங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்’ என்று அறிவித்தார், அப்போதைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகனந்தன், துண்டால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.