திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் அரவிந்த் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளவரசன் என்பவர் கொலை செய்துள்ளார்.
தலையில் பலத்த காயங்களுடன் அரவிந்த உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவன் அரவிந்தும், இளவரசும் நேற்று மாலை ஒன்றாக சேர்ந்து உடும்பு பிடிக்க சென்றதாகவும், அப்போது என்ன நடந்தது என தெரியவில்லை எனவும், ஆனால் இளவரசன் மட்டும் வீடு திரும்பியுள்ளார் எனவும், அரவிந்த் தலையில் பலத்த காயங்களுடன் உடும்பு பிடிக்க சென்ற இடத்தில் மரணம் அடைந்து கிடந்ததாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் வயது 12. இவர் நேம்மேலி அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளி முடிந்ததும் அவர் ஒத்த வயதுடைய மாணவர்களோடு விளையாடிவிட்டு வீடு திரும்ப இருந்திருக்கிறார். அப்பொழுது அதே குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளவரசன் என்பவர், ‘வா உடும்பு பிடிக்க போகலாம்’ என கூறி அரவிந்தை அழைத்துள்ளார். பிறகு இருவரும் உடும்பு பிடிக்க சென்றிருக்கின்றனர். அதன் பிறகு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தில், உடும்பு பிடிக்க சென்ற இளவரசன் வீடு வந்து உடைகளை மாற்றி குளித்ததும், அரவிந்தன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் அரவிந்தனும், இளவரசனும் ஒன்றாக தான் உடும்பு பிடிக்க சென்றுள்ளார்கள் என்பதை அரவிந்தனோடு விளையாடியவர்கள் அரவிந்தனின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்கள்.

அதன் பிறகு உடும்பு பிடிக்க சென்ற இடத்தில் போய் பார்க்கும் பொழுது அரவிந்தன் தலையில் பலத்த காயத்துடன் மரணமடைந்து கிடந்திருக்கிறார். அதன்பிறகு அரவிந்தன் தாய் அம்பிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து இளவரசனை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள் விசாரணையில் இளவரசன் அரவிந்தனை ஏன் கொலை செய்தார். எதற்காக கொலை செய்தார் என வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல கோணங்களில் விசாரித்த பிறகுதான் உண்மைகள் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் கைரேகை நிபுணர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இளவரசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.