15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் கடும் போர் நடைபெற்றது.போரில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.அதிலும் குறிப்பாக முள்ளிவாய்க்கால பகுதியில் தான் அதிக உயிரிழப்பு நிகழ்ந்தது.இந்த நிலையில் இலங்கை முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்தவர்களுக்கு 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கபட்டது.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைபுலிகளுக்கு எதிராக இறுதிகட்டபோர் நடந்தது.அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கை பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார். இந்த போரின்போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும் இனப்படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இலங்கையில் கடும் ராணுவ நெருக்கடி நிலவி வந்ததால் பொது மக்கள் யாரும் பெருமளவு இந்த நிகழ்வில் பங்கேற்க்கவில்லை.இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி வேறு நிலவ வருகிறது.அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த நினைவேந்தலில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை மட்டுமில்லாமல்வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களும், முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.இந்த நினைவேந்தல் நிகழ்வில் வந்திருந்த ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
2009 இல் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை சிங்கள அரசு மேற்கொண்டது. குழந்தைகள் குறிவைத்து அழிக்கப்பட்டனர். சர்வதேச சமூகத்தையே நிலை குலையச் செய்த முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தான் நடக்கும். அதோடு, இதற்கு அரசு தரப்பில் கட்டுபாடுகளும் தடைகளும் போடப்படும்.
இந்த ஆண்டு, இலங்கையில் இறுதிக்கட்ட போரில் உயிர்நீத்த உறவுகளை தமிழர்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்கள். மே 18ம் தேதியான இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.