கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து பாதிப்பு. ஆனால் இவ்வாண்டு வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் மரங்கள் ரயில் தண்டவாள பாதையில் விழுந்து போன்ற காரணங்கள் குறித்து, இன்று மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இது ஆங்கிலேயர்களால் துவங்கிய இன்று வரை அதன் பழமை மாறாமல் இயக்கப்படுவதால், இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடுகள் மற்றும் இன்றி ஏராளாமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து பாதை அமைந்துள்ள பகுதிகளில், அதிக கனமழை பொழிவு காரணமாக, மண் சரிவு ஏற்பட்டு, மலை ரயில் போக்குவரத்து மரங்கள் தண்டவாளங்கள் மீது கீழே விழுந்து சேதம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான அலை ரயில் போக்குவரத்து மேலும் ஐந்து நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் சுற்றுலாப் பணியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அந்த வகையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய முதலே, மலை ரயில் போக்குவரத்து பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி ஆகிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆம் தேதி மலை ரயில் போக்குவரத்து பாதையில் பல இடங்களில் மன் சரிவு மற்றும் மரங்கள் தண்டவாளங்கள் மீது விழுந்து சேதமாகின. இதனால் 4,5,6,7 ஆகிய நான்கு நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கபட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் கனமழை காரணமாக மலை ரயில் போக்குவரத்து பாதை அமைந்துள்ள கல்லார், முதல் ஹில்கிரோ வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மலை ரயில் போக்குவரத்து தண்டவாளத்தில் மரங்கள் விழுந்தது. இதன் காரணமாக இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்ல கல்லார் வரை சென்ற ரயில் போக்குவரத்து ரத்து செய்யபட்டு, மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கபட்டனர். பின்னர் இன்றும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.