கோவையில் திடிரென்று தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு..!

2 Min Read

கோவை செல்வபுரத்தில் இருந்து உக்கடம் செல்லும் சாலையில் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கோவையில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால், நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் திடிரென்று தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

இந்த நிலையில் செல்வ சிந்தாமணி குளம் நிறைந்து. அதிலிருந்து ராஜ வாய்க்கால் வழியாக வெளியேறிய தண்ணீர் செல்வபுரம் உக்கடம் சாலையில் ஓடியது. செல்வபுரம் – உக்கடம் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் ஆறாக காட்சி அளித்தது. ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலை முழுவதும் ஓடிய நிலையில் அந்த வழியாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தண்ணீரில் மிதந்தபடி அந்த சாலையை கடந்தன.

ராஜவாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்தது. தண்ணீரை திறந்து விடுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சாலை முழுவதும் தற்பொழுது தண்ணீராக ஓடிக்கொண்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். சாலை முழுவதும் தண்ணீர் ஓடும் நிலையில் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவையில் திடிரென்று தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

உடனடியாக தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இருசக்கர வாகனங்கம் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்திப்பதாகவும் , கடந்த 20 வருடங்களில் இது போல நடந்தது கிடையாது எனவும், மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a review