பண மோசடி வழக்கு : தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மனைவி கைது.. – போலீசார் அதிரடி நடவடிக்கை..

2 Min Read
கடை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 51/2 லட்சம் மோசடி
  • பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மனைவி கைது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை நந்தனம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (42) இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார், தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்குத் தொகை தருவதாகவும் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 2500 முதல் லாபத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ரூபாய் ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தனர், தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பங்குத் தொகையாக வழங்கி வந்த ஹக்கீம், கடந்த 2022 ஆம் ஆண்டில் பங்குத்தொகை வழங்காமல் முதலீட்டாளரை ஏமாற்றிவிட்டு தனது மனைவி பாத்திமா உடன் தலைமறைவானார், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தாமதமானது, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்களை அளித்தனர், இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றம் செய்யப்பட்டது, தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பூரணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் தங்கி இருந்த ஹக்கீமை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

இதை அறிந்த அவரது மனைவி பாத்திமா (35) தலைமறைவு ஆனார், தொடர்ந்து பாத்திமாவை போலீசார் தேடி வந்தனர், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாத்திமா தஞ்சை, கோவை, திருச்சி என பல ஊர்களில் இடம் மாறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, போலீசார் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பகுதியில் பாத்திமா இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர்.

 

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/asset-hoarding-case-against-kaliraj-madras-high-court-directs-anti-corruption-department-to-complete-investigation-in-six-months/

இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி பாத்திமாவை கைது செய்து நேற்று மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a review