மோடி விசிட் , அண்ணாமலை அப்சென்ட் – பின்னணி என்ன ?

2 Min Read
பாஜக அண்ணாமலை

பிரதமர் மோடி தமிழ்நாடு பயணத்தின் போது அக்கட்சியின் மாநில தலைவர் பங்கு கொள்ளாதது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உடைத்து கொண்டே உள்ளது . இதற்கு தமிழ் நாடு பாஜக தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்

- Advertisement -
Ad imageAd image

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார் . அப்பொழுது அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .

ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர். சென்னை – கோவை இடையேயான தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும்.

8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் பயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் காந்தி இன் தமிழ்நாடு’ (Gandhi Travel in TamilNadu) என்ற புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார்.

பாஜக அண்ணாமலை அப்சென்ட்

கர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர் இறுதிப்பட்டியல் தேர்வு நடைபெற்று வருவதால் பிரதமர் மோடி தமிழ் நாட்டில் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்று தமிழக பாஜக தரப்பில்  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் , பாரத பிரதமர் மோடி மீது அளவற்ற அன்பு காட்டிய தமிழ் மக்களுக்கு நன்றி என பதிவுசெய்துள்ளார் . மேலும் வணக்கம் மோடி என்ற ஹேஸ்டேக் 1 மில்லியன் டுவீட்களை கடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review