தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது – எல்.முருகன்

1 Min Read

தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென் தமிழகத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தண்டவாளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, செந்தூர் விரைவு ரயில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மோடி

வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் தனித் தீவாக மாறியது. இதனால் இந்த ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கும் மற்றும் அவர்கள் சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக தமிழக மக்கள் சார்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் பாரத பிரதமர் மோடி அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review