மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி – அமைச்சராக கவர்னர …

2 Min Read
பொன்முடி வழக்கு

முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ, பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை, அரசு திரும்ப பெற்றது. அவர் அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி, கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

சொத்து குவிப்பு வழக்கில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி குற்றவாளி என, கடந்த டிசம்பர் 19-ல் நீதிமன்றம் அறிவித்தது.

அமைச்சராக கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அவருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, டிசம்பர் 21-ல் உத்தரவிட்டது. இதனால், அவர் தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறையானது, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி

இதன் தொடர்ச்சியாக, பொன்முடி வெற்றி பெற்ற, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி காலியானதாக, இந்த மாதம் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, சட்டசபை செயலகத்தில் இருந்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

கவர்னர்

இந்த நிலையில், பொன்முடிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, கடந்த 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் தொடர்ச்சியாக, பொன்முடி எம்.எல்.ஏ., பதவி இழந்ததால், திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஸ்டாலின்

முறைப்படி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்து வைக்கும்படி, கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஒருவர், ஓரிரு நாட்களில் மீண்டும் எம்.எல்.ஏ., பதவியை பெறுவது, இதுவே முதல் முறை பொன்முடி அமைச்சராக பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடக்க வாய்ப்புள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி

ஆனால், கவர்னர் ஏற்கனவே இரண்டு நாள் பயணமாக டில்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதற்காக இன்று காலை டிக்கெட் போடப்பட்டுள்ளது. எனவே, இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடப்பது சந்தேகம் என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் அரசியல் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review