மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சியை பிடிக்கிறது ஜோரம் மக்கள் இயக்கம்

0
42
லால்துஹோமா

இந்தியாவின் 5 மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.மூன்று மாநில தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்து தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில்,மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த நவ.,7ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 9 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களை அள்ளியது. இதையடுத்து ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது.

இவ்வியகத்தின் தலைவரான 74 வயது லால்துஹோமா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் 1982 களில் முன்னாள் பிரதமர் இந்திரா பாதுகாவலராக பணியாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒய்வு பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார். 2019-ம் ஆண்டு ஜோரம் மக்கள் இயக்கத்தினை துவக்கி மாநிலத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கட்சியாக வளர்த்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மிசோரம் தேர்தலில் எதிர்க்கட்சியான இசட்.எம்.பி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அந்த கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று உள்ளது.

லால்துஹோமா

மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 27 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.ஆளும் தேசிய முன்னணிக்கும் (எம்என்எப்) கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். வடகிழக்கு மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணியை வீழ்த்திய ஜோரம் மக்கள் இயக்கம் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.ஜோரம்தங்கா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பட்டியிடம் ராஜ்பவனில் சமர்ப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here