அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியலும், மற்ற இடங்களிலும் வருவார் – ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்..!

2 Min Read

வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியலும், மற்ற இடங்களிலும் வருவார் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சென்னை மாதிரி விடாமல், கோவை ஆட்சியாளர்கள் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்தது மன வருத்தம் அளிக்கிறது. ரத்தம் சிந்தி இருக்கின்றது எனவும், கோவில் முறையாக நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். வைகுண்ட ஏகாதேசி நேரத்தில் நடைபெற்றுள்ளது. ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று எனவும், இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவித்தார். இன்னும் அதிகமாக கண்காணிப்பு தேவை என தெரிவித்த அவர், உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்து இருக்கும் வகையில் தீர்ப்பு வந்து இருக்கிறது. பெரியாரை, தேசிய விரோத கருத்துகளை பகிர்வதற்கு கேடயமாக திமுகவினர் பயன்படுத்துகின்றனர் எனவும், பெரியாரின் கருத்துகள் மதிக்க கூடியது. ஆனால் அவர் இனத்தின் விடுதலையை மாநிலத்தோடு ஒப்பிடுவதை ஏற்கமாட்டார் எனவும் தெரிவித்தார். பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதல்வர் தெரிவிக்கின்றார் எனக்கூறிய அவர், ஆனால் பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சிதான் மத்தியில் இப்போது நடக்கின்றது எனவும் தெரிவித்தார். திமுகவும், கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை இந்த அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகின்றது எனவும், காஷ்மீர், கவர்னர், கட்சி தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்பொழுது திமுக பேசிக் கொண்டிருக்கிறது

அவர்களுக்கு அமேசியா எனவும் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார். ஸ்ரீரங்கத்தில் ரத்தம் சிந்தும் அளவிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து இருப்பது, பாதுகாப்பு சீர்கேடுகளை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் தெரிவித்தார். கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று எனவும், கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் எனவும், கேரள கவர்னர் மீது தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு தாத்தா, அவங்க அப்பன் பதவியை பெற உதயநிதி இருப்பது போல என தெரிவித்த அவர், கலைஞர் உரிமை தொகை என்பது கலைஞரா கொடுக்கின்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியலும் ,மற்ற இடங்களிலும் வருவார் எனவும் தெரிவித்தார். கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழல் திட்டுவார் எனக்கூறிய அவர், திமுக யாரோட அப்பன் வீட்டு சொத்து எனவும் கேள்வி எழுப்பினார். திமுக தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு அவரே வழி செய்கின்றார் எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்ராஜன் தெரிவித்தார்.

Share This Article
Leave a review