கடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார்.2014-ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்தது.தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்படுகிறது.இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு 10வது முறையாக வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதுவரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புழல் சிறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் அமைச்சர் வீல் சேர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு, கழுத்துப் பகுதியில் வலி மற்றும் உடல் வலி காணப்படுகிறது. இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு இரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இன்று புழல் சிறைக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் நவ.20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.