- போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம் பி – எம் எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நூறு பேர் வீதம் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படும் எனவும் நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். செந்தில் பாலாஜியின் வழக்கு கடந்து வந்த பாதையைப் பற்றிய முழுமையான விளக்கம் இங்கே.
அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியில் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆக்கினார்.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்தில் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது சர்ச்சை கிளம்பியது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி நியமனத்துக்காக லஞ்சமாக பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக செந்தில் பாலாஜி மீது தேவசகாயம் என்பவர் புகார் கொடுக்கிறார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயரே இல்லாம வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடவே செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் உட்பட 40 பேரின் மீதும் சென்னை மத்திய குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்கிறது.போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார் ஜெயலலிதா.
இதேவிவகாரத்தில் அருள்மணி என்பவரும் மத்திய குற்றப்புலனாய்வு காவல்துறையிடம் செந்தில் பாலாஜி மீது புகாரளிக்கிறார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கையும் விசாரித்தது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து வெளியேறி திமுக-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் 1.62 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.
திமுக ஆட்சியை பிடித்த சமயத்தில் கரூரில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பொதுவாக சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது.
அமைச்சர் செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது என்பதால் அதை நாங்கள் ரத்து செய்கிறோம். வழக்கை தொடக்கத்திலிருந்து விசாரிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டிருந்தனர்.
மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம் பி – எம் எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Leave a review
Leave a review