- ”சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்திற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதுஇதையடுத்து நள்ளிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்திற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நள்ளிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஈசிசி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது பல ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்திற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான ரஜினிகாந்திற்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலுக்கு வர திட்டமிட்டு இருந்த ரஜினிகாந்த் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்த முடிவை கைவிட்டார்.
எனினும், படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தான் ரஜினிகாந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரஜினிகாந்த்திற்கு இருதயவியல் துறையை சேர்ந்த மூத்த மருத்துவர்கள் தற்போது மருத்துவ சிகிச்சையை தொடங்கியுள்ளனர். அவருக்கு இருதய நாள அடைப்பு எதுவும் இருக்கிறதா ? என்பதை கண்டறியும் வகையில் இசிஜி, எக்கோ ஆகிய பரிசோதைனகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்புகள் கண்டறியும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக மருத்துவக் குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த பரிசோதனைகளுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/ready-ah-nanba-ott-release-date-announcement-goat-ott-release-date/
தற்போதைய நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு மருத்துவமனை தரப்பில் ரஜினிகாந்த் உடல் நிலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.