ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மயிலம் அடுத்த ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் மாம்பாக்கம், செம்பாக்கம், மேல்சிவிரி, ஆத்திப்பாக்கம்,
வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

வெள்ளிமேடு பேட்டையில் வாக்கு சேகரித்த அமைச்சர் மஸ்தான் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், போன்டா சுட்டு கொடுத்தும், நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அதை தொடர்ந்து வெள்ளிமேடு பேட்டை பஜார் வீதியில் உள்ள கடைகளில் ஆதரவு திரட்டிய அமைச்சர் மஸ்தான், முதலமைச்சரின் சாதனைகளை எடுத்து கூறி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மாம்பாக்கம், செம்பாக்கம், ஆத்திப்பாக்கம் மேல்சிவிரி உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், வேட்பாளர் தரணி வேந்தனுக்கு பெண்கள் ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் மாசிலாமணி, அவை தலைவர் டாக்டர் சேகர், ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராமன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் அமராவதி, திருஞானசம்பந்தம் காளி, ஹரி, காளி, மணி,

ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் அணி கமலக்கண்ணன், மாம்பாக்கம் கிளை கழக நிர்வாகிகள் வசந்தகுமார், கதிர்வேல், சோமசுந்தரம், மேகவந்தான், தேவராஜ், செம்பாக்கம் ஊராட்சி நிர்வாகிகள் சந்திரபாபு மகாலிங்கம், ராமலிங்கம்,
மலையரசன், தங்கமணி, ராஜாராமன், மேல்சிவிரி ஊராட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், சுரேஷ், அருள்தாஸ், ரஞ்சித், குமார்,வெள்ளிமேடு பேட்டை ஊராட்சி நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சுப்புராஜ், பாக்கியராஜ், மணிகண்டன், நூருல்லா, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.