பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் பவுடர், பிரட் வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர்

2 Min Read
சென்னை மழை

மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.மழை காரணமாக மக்களின் அடிப்படை தேவைகள்,உனவுத் தேவைகள் அதிகரித்து உள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நாளை காலை பால் பவுடர், பிரட் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
கன மழை

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் சென்னை விட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக படிபடியாக மழை குறையும் என்று, காற்றில் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

சென்னையின் பெரும்பான்மையான சாலைகளில் சுமார் 3 அடி வரை மழை நீர் தேங்கியுள்ளது. நகரம் முழுவதும் அனைத்து விதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மின்சார சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகளில் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருவதால், கரையோரம் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையம்

தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை அப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பாக சென்னை மாநகராட்சி முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். இந்நிலையில், தேங்கி இருக்கும் மழை நீர் வெளியெற்றம் மற்றும் மழை நீர் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது.

சென்னையில் தொடர் கனமழை தொடர்வதால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பால்

சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கல்வி நிலையங்கள், நிதி நிறுவனங்கள்,வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a review