மிக்ஜம் புயல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினிடம் நிவாரண பணிகளுக்காக குவியும் நிதி..!

2 Min Read

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த பேரிடர் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர்கள் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அதேபோல் மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் மு.க ஸ்டாலினை திமுக தலைவர் கி. வீரமணி நேரில் சந்தித்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

அப்போது திமுக துணைத்தலைவர் கலி. பூங்குன்றன் பொருளாளர் குமரேசன் உடன் இருந்தனர். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அக்கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் மற்றும் கட்சி நிதி என ரூபாய் 10.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், சின்னப்பாசதன், திருமலைக்குமா,ர் ஏ.ஆர்.ஆர் ரகுமான் ஆகியோர் இருந்தனர். தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநருமான அபாஷ் குமார் செயலாளரும் ஆயுதப்படை ஐ.ஜியுமான ஜெய கௌரி ஆகியோர் முதல்வரை சந்தித்து அச்சங்கத்தின் சார்பில் ரூபாய் 9.78 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர்ஜிவால் உடனே இருந்தனர். மேலும் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாந்தி துரைசாமி, துரைசாமி முதல்வரை சந்தித்து ரூபாய் 1 கோடிக்கான காசோலையை பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். அதேபோல் சன் மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர், செயல் துணைத்தலைவர் கார்த்திக் ராஜசேகர் புயல் நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொன்னுதுரை, இயக்குனர் அபிநயா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

Share This Article
Leave a review