மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியது.மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.

2 Min Read
காவேரி ஆறு

கர்நாடகவில் மற்றும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணை முழுக் கொள்ளவு எட்டியதையடுத்து,காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 80ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு உள்ளிட்ட 11மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வெள்ள பாதிக்க கூடும் என 41இடங்கள் கண்டறிந்தும் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள சூழ்ந்துள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் இந்தாண்டு ஆடிப்பெருக்கு,ஆடி அமாவாசை அடுத்தடுத்து நாட்களில் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் வரும் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்,கொடுமுடி மகுடேஸ்வரன் கோவில்,காங்கேயம்பாளையம் நட்டாட்ற்றீஸ்வர்,நஞ்சைகாளமங்கலம் குலவிளக்கு அம்மன்,பாசூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா,ஆடி அமாவாசை தினத்தில் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.இந்நிலையில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நட்டாட்ற்றீஸ்வர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள கழுகு பார்வையிலான காட்சி வெளியாகியுள்ளது.வெள்ள நீர் கோவில் வளாகத்தில் அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றின் குறுக்கே கோவிலுக்கு பாலம் போடப்பட்ட நிலையிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை,

மேலும் நட்டாட்ற்றீஸ்வரை தரிசனம் செய்ய ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கரையில் இருந்தப்படி வணங்கி சென்றனர்.மேலும் நட்டாட்ற்றீஸ்வர் கோவிலையொட்டியுள்ள இரு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.மேலும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் யாரும் ஆற்றூக்குள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.மேலும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.காவிரி ஆறு பாயும் மற்ற பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பக்தர்கள் யாரும் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கபடவில்லை மீறி செல்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share This Article
Leave a review