ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்ற கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்- வைகோ

1 Min Read
வைகோ

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவி அவர்களை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்துகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,”மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவி அவர்களை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்துகிறது.

தலைநகர் சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.
கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் கோவையிலும், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் கடலூரிலும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் தென்சென்னையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் காஞ்சிபுரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.கு.மணி அவர்கள் விழுப்புரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் திருநெல்வேலியிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் குடந்தையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக்முகமது அவர்கள் திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.

கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review