இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மறுப்பு..!

2 Min Read

டெல்லியில் இன்று நடக்கும் இந்திய கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

டெல்லியில் நாளை (டிச.6) நடைபெற விருந்த இந்திய கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், அக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்த இந்திய கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பிடித்துள்ளன. ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டம் தள்ளி போடப்பட்டது. ஐந்து மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டுமே இந்திய கூட்டணி அமைத்து அமைந்தது. மற்ற மாநிலங்களில் சீட் ஒதுக்க காங்கிரஸ் மறுத்து விட்டது.

இறுதியில் ஐந்து மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்றது. இதனை எடுத்து 4 மாதமாக நடைபெறாமல் இருந்த இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்ற முடியாது என்று அறிவித்து விட்டார். அதேபோல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டம்

அவருக்கு பதில் சமாஜ்வாடி மூத்த தலைவர் ராஜகோபால் யாதவ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இன்று நடக்கும் இந்தியா கூட்டணியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 3-வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review