கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை துறை அதிகாரியிடம் எடுத்துக் கூறியும், அதனை பொருட்படுத்தாமல் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பின் சார்பாக கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
தஞ்சை மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பின் சார்பில் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து,

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொண்டனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் நடந்துள்ள முறைகேடுகளை துறை அதிகாரிகளிடம் உரிய முறையில் எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்,
இந்த முறை கேட்டுக்கு துணை போவதாகவும் விவசாயிகள் வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தியும், வங்கி கணக்கில் வரவு வைக்காமல் இருப்பதால் விவசாயிகள் மீண்டும் கடன் பெற தகுதி இல்லாமல் போய்விடுவதாகவும்,

மேலும் விவசாய சங்கத்தின் பங்குத்தொகை சேமிப்பு கணக்கிட்டு செலுத்துவதற்கு ரசீது வங்கி கணக்கு புத்தகம் வழங்காததை கண்டித்தும்,
இதுபோல் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.