வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கவிஞர் தாமரை எழுத்தில், மதுஸ்ரீ பாடிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனுடன் கவுதம் மேனனின் படமாக்கமும், சிம்புவின் நடனமும் வரவேற்பை பெற்ற நிலையில், பாடல் வெளியான 5 மாதங்களில் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எல்லாம் இந்த பாடல் இடம் பெற்று பெருமளவு திரை ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் பெருமளவு வரவேற்பை பெற்றது என்று சொன்னால், அது வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் தான்.