இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே தேர்வு..!

3 Min Read

இந்தியா கூட்டணியில் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கேவை தேர்வு செய்ய காணொலி காட்சி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த நிலையில், தேர்தல் வியூகம் அமைத்தல், கூட்டணியின் முக்கிய பதவிகளுக்கான தலைவர்களை தேர்வு செய்தல், தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடந்தது.

அதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் நடப்பதற்கு 16 மணி நேரத்திற்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டதால், ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தனர்.

இந்தியா கூட்டணி தலைவராக கார்கே தேர்வு

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க முடியவில்லை என தகவல் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், தொகுதி பங்கீடு குறித்து அனைத்து தலைவர்களும் விவாதித்தனர். இம்மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வியூகம், கூட்டு பேரணி நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தற்போது இன்று தொடங்க உள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் அவரவர் மாநிலங்களில் ஆதரவு தர வேண்டுமென ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, கூட்டணியின் தலைவர் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தலைவராக நியமிக்க ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதனை அடுத்து இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே முறைப்படி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரின் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காத கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட அனைவரின் ஆதரவு இருந்தால் மட்டுமே இப்பொறுப்பை ஏற்பதாக நிதிஷ் குமார் கூறியதாக கூறப்படுகிறது. அதனால் இந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நிதிஷ்குமாரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்தியா கூட்டணி தலைவராக கார்கே தேர்வு

அதனால் அவரை சமாளித்து, உடன்பட வைக்கும்படி சரத் பவார் மற்றும் கெஜ்ரிவாலிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல, ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க நிதிஷை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு லாலு மற்றும் தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. காணொலி கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில்;-

இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வதில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓட்டுக்காக கூட்டணியின் முகமாக யாரையும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தேர்தலுக்கு பிறகு தலைவரை தேர்ந்தெடுப்போம். 1977-ல் மொரார்ஜி தேசாய் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. அது பல கட்சிகள் ஒன்றிணைவதற்கு சாதகமான அறிகுறியாக இருக்கும்’’ என்றார்.

தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் கூறுகையில்;- ‘‘பாஜவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்பட விரும்புகிறோம். அதனால் இந்தியா கூட்டணியில் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் தலைமை, மேற்கு வங்கத்தில் அதன் வெற்றி வாய்ப்புகளையும், பலவீனங்களையும் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என கூறியிருக்கிறார்.

Share This Article
Leave a review