பெங்களூர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி – குமரி மாவட்டத்தில் தங்கி இருந்தது அம்பலம் – என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!

1 Min Read

பெங்களூர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி குமரி மாவட்டம் அடுத்த மார்த்தாண்டத்தில் தங்கி இருந்தது அம்பலம். என்ஐஏ அதிகாரிகள் சோதனை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு.

- Advertisement -
Ad imageAd image

பெங்களூர் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதை அடுத்து தேசிய புலனாய்வு குழுமை பல்வேறு கோணங்களில் தகவல்களை சேகரித்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

குமரிமாவட்டம் மார்த்தாண்டம்

அதில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான ராஜா முகமது வயது (45) ,என்பவருக்கு முக்கிய பங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து தேசிய புலனாய்வு குழுமை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

கலை அருள் காம்ப்ளக்ஸ்

அப்போது தேசிய புலனாய்வு விசாரணையில் ராஜா முகமது, கடந்த 2022-ம் ஆண்டு 6 மாதங்கள் குமரி மாவட்டம், அடுத்த மார்த்தாண்டத்தை அருகே சாங்கை பகுதியில் சேர்ந்த அருளப்பர் என்பவர் கலை அருள் காம்ப்ளக்ஸ் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென சாங்கை பகுதிக்கு வந்து அருளப்பனின் வீட்டை சுற்றி வளைத்து அங்கிருந்த வீட்டு உரிமையாளர்களிடம் பல்வேறு கோணங்களில் அவர்களை தனி அறையில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை

அப்போது இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் உள்ள முக்கிய குற்றவாளி மார்த்தாண்டத்தில் தங்கி இருந்தது பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review