மக்னா காட்டு யானை.! ஹெலிகேமரா மூலம் கண்காணிப்பு., காலர் ஐடி கழுத்தில் மாட்டி விடப்பட்டது.!

0
59
மக்னா காட்டு யானை

நேற்று பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானையை அடர் வனப்பகுதியில் ஹெலிகேமரா மூலம் வனத்துறையினர் கண்காணிப்பு. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வனமுத்து மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள நாகதாளி பள்ளம் பகுதிக்கு வந்த மக்னா யானை மீது, வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் துப்பாக்கி மூலமாக மயக்க ஊசியை செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்னா யானையை, கும்கி கபில் தேவ் உதவியுடன் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் கயிறு கட்டி லாரிக்கு இழுத்து வரப்பட்டது.

லாரியில் ஏற மறுத்த மக்னா யானையை, தனது தந்தத்தால் கும்கி கபில்தேவ் முட்டி தள்ளியது. முரண்டு பிடிக்காமல் மக்னா யானை லாரியில் ஏறியதை, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து, வால்பாறைக்கு கொண்டு சென்று இ.எம்.எஸ் கருவி பொருத்தப்பட்ட பிறகு சின்னகல்லாறு அடர்ந்த வனப்பகுதியில் மக்னா யானையை நேற்று மாலை வனத்துறையினர் விடுவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சரளபதி பகுதியில் உலா வந்த மக்னா யானையை கும்கி யானைகள் உதவியுடன் நேற்று பிடித்த வனத்துறை வால்பாறை சின்னக்கல்லார் அடர் வனப்பகுதியில் மக்னாவை விடுவிக்கலாம் என்றனர். லாரியில் ஏற மறுத்த மக்னா யானையை, தனது தந்தத்தால் கும்கி கபில்தேவ் முட்டி தள்ளியது.

முரண்டு பிடிக்காமல் மக்னா யானை லாரியில் ஏறியதை,
அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து, வால்பாறைக்கு கொண்டு சென்று இ.எம்.எஸ் கருவி பொருத்தப்பட்ட பிறகு சின்னகல்லாறு  அடர்ந்த வனப்பகுதியில் மக்னா யானையை நேற்று மாலை வனத்துறையினர் விடுவித்தனர்.

காலர் ஐடி கழுத்தில் மாட்டி விடப்பட்ட மக்னா யானையின் நடமட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மீண்டும் ஊர் பக்கம் வருகிறதா? அடர் வனப்பகுதிக்கு செல்கிறதா? உணவு உட்கொள்கிறதா? போன்ற ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் வனத்துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here