உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிட்ட பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
மதுரை மாவட்டம் சிவகங்கையை சேர்ந்த சந்திரசேகர் ,ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களில், ” தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை கடந்த 2011 முதல் செயல்பட்டு வருகிறது.
உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் , சுகாதாரமான முறையிலும் கலப்படமற்ற முறையிலும் தயாரித்து விற்பனை செய்கின்றனரா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கண்காணிப்பர்.

இந்த துறை தொடங்கப்பட்ட போது, சுகாதார ஆய்வாளராக பணியில் இருந்தவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்,
இவர்களுக்கு இந்த துறையில் பணி விதிகள் உள்ளிட்ட துறை சார்பில் எந்த விதிமுறைகளையும் வகுக்க வில்லை. ,
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 119 உணவுபாதுகாப்பு அதிகாரி காலிப் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு , தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 21/08/2024 அன்று வெளியிட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு சுகாதார ஆய்வாளராக பணியில் இருந்தவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரியாக நியமிமிக்க பட்டவர்களை பணி வரன் முறை படுத்தாமல், நேரடி நியமனம் செய்யக் கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
எனவே தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யபட்டோரின் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறி யிருந்தார்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது . உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிட்ட பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/krishnagiri-13-year-old-student-sexual-harassment-case-women-lawyers-association-vice-president-pens-to-supreme-court/
மேலும், , தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.