குடிக்கும்நீரில் லித்தியம்.! ஆட்டிசம் தாக்கும் அபாயம் உள்ளதா.? ஆய்வாளர்கள் சொல்வதென்ன.!

2 Min Read

`எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிகளின் பயன்பாடு அதிகரித்து நிலத்தில் வீசப்படும்போது, இது நிலத்தடி நீரை மாசுபடுத்தி லித்தியம் அளவை நிலத்தடி நீரில் அதிகரிக்க வாய்ப்புண்டு.

- Advertisement -
Ad imageAd image

குடிப்பதற்குப் பயன்படுத்தும் வீட்டுக்குழாய் நீரில், அதிகளவு லித்தியம் இருந்தால், அதைக் குடிக்கும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குழாய் நீரில் லித்தியம் கலத்தல் என்பது இப்பொழுதுல்ல காலங்களில் சர்வ சாதரணமாக மாறி வருகிறது. இதைத் தடுப்பதற்க்கு பல வேலைகள் செய்யப் பட்டாலும் குறைந்தபாடில்லை.

இத்தகைய சூழலில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், டென்மார்க் நகரில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அப்படி மேற்கொள்கையில் ஓர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்றை கண்டனர். டென்மார்க்கில் உள்ள 151 பொது நீர்நிலைகளில் உள்ள லித்தியம் அளவுகள் மற்றும் 1997 முதல் 2013 வரை பிறந்த குழந்தைகளின் தரவுகளைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டனர்.

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படாத 63,681 குழந்தைகளுடன், 12,799 ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒப்பீடு செய்து பார்த்தனர்.  லித்தியம் அளவுகளைக் காலாண்டுகளாக அல்லது நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கால் பகுதி மதிப்புகளைப் பிரித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இது குறித்து ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், வீட்டுக்குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்து, அதை கர்ப்பிணிகள் குடித்தால், இது நரம்பியல் வளர்ச்சியில் ஈடுபடும் ஒரு முக்கிய மூலக்கூறு பாதையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மன வளர்ச்சி குறைபாட்டையும் இந்த ஆட்டிசம் ஏற்படுத்தவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

எதிர்காலத்தில் லித்தியம் பேட்டரிகளின் பயன்பாடு அதிகரித்து நிலத்தில் வீசப்படும்போது, இது நிலத்தடி நீரை மாசுபடுத்தி லித்தியம் அளவை நிலத்தடி நீரில் அதிகரிக்க வாய்ப்புண்டு.

மனநல பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க லித்தியம் கொடுக்கப்பட்டாலும், கர்ப்பிணிகள் லித்தியம் எடுத்துக் கொள்வது கருச்சிதைவு, இதயக்கோளாறுகள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்குக் குறைபாடுகளை ஏற்படுத்துவதற்கான ஆபத்துடன் தொடர்புடையது மனித மூளையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய குடிநீரில் உள்ள எந்த அசுத்தங்களும் தீவிர ஆய்வுக்குத் தகுதியானவை என இந்த ஆய்வில் ஈடுபட்ட நரம்பியல் பேராசிரியர் பீட் ரிட்ஸ் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review