அ.தி.மு.க மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரமாண்ட கூட்டம் இந்த மாநாடு என்பதால் தமிழக அரசியலில் களத்தில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மாநாடு நடக்கும் இடத்தில் 51 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர்.இதனால் மதுரை விழாக்கோலம் பூண்டது.
அப்போது பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க ஒரு மாபெரும் இயக்கம். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.
1972 அக்டோபர் 17-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க கட்சியை தோற்றுவித்தார். இன்று அ.தி.மு.க பொன்விழா கொண்டாடி 51 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகாலம் தமிழ் மண்ணிலே ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க.தான்.

மீனவர்களுக்கு பாதுகாப்பான அரசு அ.தி.மு.க.,தான். கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தினோம். கச்சத்தீவை மீட்க தி.மு.க எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை. தற்போதை தி.மு.க ஆட்சிக்கு பொய் தான் மூலதனம். கட்சத்தீவை மீட்போம் என முதல்வர் ஸ்டாலின் பச்சையாக பொய் சொல்கிறார். 2008-ம் ஆண்டு கட்ச தீவை மீட்பதற்கு வழக்கு தொடுத்தது அ.தி.மு.க தான். 2011ல் சட்டப்பேரவையில் தீர்மானத்தை அ.தி.மு.க நிறைவேற்றியது. ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் தான் கட்ச தீவை மீட்போம் என்று முதல்வர் பேசுகிறார். மீனவர்களின் வாக்குகளை பெறவே கச்சத்தீவை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
தி.மு.க.,வுக்கு அனைத்தும் பொய்தான். தி.மு.க முழுக்க முழுக்க பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்தனர். தி.மு.க.,வுக்கு பொய் தான் மூலதனம். ஆனால் பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி. சாதித்து காட்டுபவன். இவர்களே நீட் தேர்வை கொண்டுவந்துவிட்டு. இப்போது இவர்களே விலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்காங்க. கடந்த 2010-ல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்த போதும் தான் நீட் கொண்டு வரப்பட்டது. இதை மறைத்துவிட்டு தற்போது நீட் ரத்து கோரி உண்ணாவிரத நாடகம் நடத்துகின்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்துக்கு தான் இருக்கும் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆட்சி நிறைவு செய்துவிட்டனர். ஆனால் எந்த முயற்சியும் செய்யவில்லை. தற்போது மக்களுக்கு ஆட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக நீட் ரத்து உண்ணாவிரத நாடகம் நடத்தப்படுகிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க, அதை தடுக்க போராடுவது அ.தி.மு.க தான். என்று எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.