தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் ஊருக்குள் வருவதும் குடியிருப்பு பகுதிகளில் சேதம் ஏற்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.இந்த நிலையில் சிலர் வன விலங்குகளை கட்டுப்படுத்த சட்ட விரோதமாக கண்ணி வெடிகளை புதைத்து வருகின்றனர்.இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தையொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிாரம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர், இதனை தொடர்ந்து சிறுத்தை இருந்த இடத்திற்கு நேரில் விரைந்து சென்றனர் பாலக்கோடு வனத்துறையினர்.சிறுத்தையை எப்படியாவது சிறுத்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வனத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
அருகே சென்றால் சிறுத்தை தாக்கலாம் என வனத்துறையினர் அஞ்சியதால், வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தகை்கு மயக்க ஊசி செலத்துபட்டது, சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர் வனத்துறையி்னர்.

இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கண்ணியில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது, கண்ணியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் ஐந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.இந்த பகுதியில் மான்,முயல் போன்ர பிராணிகள் அடிக்கடி நடமாட்டம் இருப்பதை உணர்ந்த யாரோ சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
வன விலங்குகளை வேட்டையாட கண்ணி வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணையில் இறங்கியிருக்கிறது பாலக்கோடு வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வன விலங்குகளுக்கு போதிய உணவு வனப்பகுதியில் கிடைக்காததால் குடியிருப்பு பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இது போன்ற செயல்களை வனத்துறை மற்றும் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.