வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பார் அசோசியேசன் அட்வகேட் அசோசியேசன் மற்றும் மகளிர் வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதம் சங்கத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
அதில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ரவி, அருணா, பாலசந்தர், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்த இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம், சாட்சிகள் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இன்று முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை வரும் 8 ஆம் தேதி வரையில் மேற்கொள்ள உள்ளனர். அதில் திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் 1050 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.