மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்தும், அங்கு இரு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டிப்பா நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற்றனர்.மணிப்பூர் பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உட்ச பட்ச தண்டனை வழங்கிட வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய முதலமைச்சர் பிரேன் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உடனடியாக மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் பெண்களை பலியாக்கப்படுவதை தடுத்தி நிறுத்தி, பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தங்கள் கோரிக்கைகளை பதாகைகளாகவும் வைத்தும், எதிர்ப்பை முழக்கங்கள் எழுப்பியும் வெளிப்படுத்தினர்.