பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) 2024 பொதுத் தேர்தலையொட்டி, ஊடகவியலாளர்களுக்கான ஒற்றை நிறுத்த வசதி கொண்ட தளமாக பல அம்சங்களைக் கொண்ட ஒரு மைக்ரோசைட்டைத் தொடங்கியுள்ளது (https://pib.gov.in/elect2024/index.aspx). அந்தத் தளம் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் ஃபிளிப் புக்: இது பல்வேறு சுவாரஸ்யமான பகுப்பாய்வு மற்றும் தரவு நிறைந்த அம்சங்களை உள்ளடக்கியது. ஊடகவியலாளர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதுவதற்கு இந்த தகவலைப் பயன்படுத்தலாம்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் தொடர்புடைய பகுதிகளை பத்திரிகையாளர்கள் பார்வையிட பயனுள்ள இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு இன்போகிராபிக்ஸ்-கள் ஒரு குறிப்பாக வழங்கப்படுகின்றன. இந்தத் தரவுகள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையாகும்.

பொதுத் தேர்தல்- 2024-ன் வெவ்வேறு கட்டங்களுக்கான அட்டவணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய அறிவிப்புகள் குறித்த புதிய தகவல்கள் நிகழ்நேர அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தேசிய மற்றும் மாநில அளவிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் பற்றிய தகவல்கள் எளிதாக அணுகும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஊடக வழிகாட்டி உள்ளிட்ட அறிவுரைகள் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் தொகுப்பும், பயன்படுத்துவதற்கு ஏதுவாகத் தயார் நிலையில் உள்ளது.
சமீபத்திய நிகழ்வுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.