‘குட் நைட்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லவ்வர்’. இன்றைய கால காதலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுக்கு இடையிலான ஊடல் குறித்து பேசும் விதமாக நேற்றைய தினம் ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘லவ்வர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இளம் நடிகராக திகழ்கிறார் மணிகண்டன். சமீப காலமாக ரசிகர்களை கவரும் விதமாக நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் இவரது நடிப்பில் தற்போது ‘லவ்வர்’ படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரஜினியின் ‘லால் சலாம்’ படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ள இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிகண்டன் நடிப்பில் கடந்த வருடம் ‘குட் நைட்’ படம் வெளியாகி இருந்தது.
மீதாத் ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த இந்த படத்தினை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். நல்ல பீல்குட் படமாக ‘குட் நைட்’ வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. அத்துடன் நல்ல வசூலையும் அள்ளியது.

‘குட் நைட்’ படத்தின் வெற்றியினை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் தற்போது ‘லவ்வர்’ வெளியாகியுள்ளது. ஸ்ரீகௌரி பிரியா, கண்ணா ரவி, நிகிலா சங்கர், ஹரிஷ் குமார், கீதா கைலாசம், அருணாசலேஸ்வரன், ஹரிணி உள்ளிட்ட பலர் பிரபு ராம் வியாஸ் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
இந்தக்கால இளைஞர்களின் காதல், மோதலை மையமாக வைத்து இப்படம் வெளியாகி உள்ளது. ஹீரோ மணிகண்டன், ஐடியில் பணிபுரியும் தனது காதலிக்கு பொசசிவ் என்ற பெயரில் பல உத்தரவுகள் போடுகிறார். அவருடன் பேசாதே, என்கிட்ட சொல்லாம எங்கயும் போகக்கூடாது.

இப்படித்தான் டிரெஸ் போட வேண்டும் என்றெல்லாம் பல டார்ச்சர்கள் கொடுக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது. இதையெல்லாம் தாண்டி இவர்களின் காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பதை இன்றைய காலத்து இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக படமாக்கியுள்ளார் பிரபு ராம்.
நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது ‘லவ்வர்’. இதனிடையில் ரஜினியின் லால் சலாமும் நேற்றைய தினம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் ‘லவ்வர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ரிலீசான முதல் நாளே இப்படம் ரூபாய் 1 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும், காதலர்கள் தினமும் வர உள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் படத்தில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் ‘லால் சலாம்’ படம் உலகளவில் நேற்றைய தினம் ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.