கார்டை சொருகி பலமுறை முயற்சி செய்தும் பணம் வராத ஆத்திரத்தில் ஏட்டியில் இயந்திரத்தை அடித்து நொறுக்கிய கூலித் தொழிலாளி.

2 Min Read
கந்தசாமி

ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான தகவல்களை நாம் செய்தியாக பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரு மிக வித்தியாசமான சம்பவம் இப்போது செய்தியாக மாறி இருக்கிறது கேட்டாலே தலை சுற்றுகிறது. அதுவும் வேலூர் மாவட்டத்தில்.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மாவட்டம், ஊசூர் -அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில்  உள்ளது தனியார் வங்கி ஏ.டி.எம். மையம். இரவு பகலாக இந்த பகுதியில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அரசு பணியில் வேலை செய்கிறவர்கள் என தங்கள் தேவைகளுக்கு என பணம் எடுக்கும் மையம் இது. பெரும்பாலும் சனி, ஞாயிறுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலுமே பணம் கிடைப்பது குதிரை கொம்பாகத் தான் இருக்கும். காரணம் அன்று பணம் நிரப்புகிற வாகனங்கள் வராததால் மற்ற வார நாட்களில் எப்போதும் எல்லா ஏடிஎம்களிலும் பணம் இருக்கும்..

உடைக்கப்பட்ட ATM இயந்திரம்

இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி என்ற (வயது 53) கூலித் தொழிலாளி.  ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் தான் கொண்டு வந்த கோடாரி மூலமாக ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு கேட்டது அதுவும் இல்லாமல் அவருடைய செய்தியை அருகில் இருந்து அவர்கள் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸ் விசாரணையில் வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். அதன் பின்னர் கந்தசாமி அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கிற இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Share This Article
Leave a review