சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘மருத்துவ அலட்சியத்தால்’ துண்டிக்கப்பட்ட குழந்தையின் கை

0
27

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) மருத்துவ அலட்சியத்தால், 1 1/2  வயது சிறுவனுக்கு வலது கை அவனது தோள்பட்டை வரை துண்டிக்கப்பட்டது . இந்த சம்பவம் பொதுமக்களிடையே அரசு மருத்துவமனையின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்துள்ளது .

எனினும் , இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இது தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் செய்திஅறிக்கை வெளியிட்டுள்ளது .

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் மீரான் இவருக்கு அப்துல் அஜிஸா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் , கடநத 1 1 /2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் முகமது மகிர் என்ற மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளார் .

குறைமாத குழந்தையான மகிறுக்கு , பிறப்பிலிருந்தே தலையில் ரத்தக்கசிவு பாதிப்புடன் பிறந்துள்ளார் .

இதற்காக ராமநாதபுரத்திலுள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றபோதும் , பாதிப்பு சரியாகாததால் சென்னைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த தபதி , மகிறுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர் .

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29 ம் தேதி மகிறுக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் (IV) டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. டிரிப்ஸ் போடப்பட்ட சில நிம்டிங்களிலே குழந்தைக்கு வலது கையில் வலி ஏற்பட்டுள்ளது . குழந்தை வலியால் துடிப்பதை தாங்கமுடியாத அவரது தாய் அஜிஸா , அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தை வலியால் துடிப்பதை தெரிவித்துள்ளார் . எனினும் அங்கிருந்த செவிலியர்கள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டிரிப்ஸ் செலுத்தியுள்ளனர் .

சிறிது நேரத்தில் குழந்தயின் விரல்கள் தொடங்கி , வலது கை முழுவதும் படிப்படியாக ரத்தஓட்டம் நின்று , கை விரல்கள் அழுகத் தொடங்கியுள்ளது .

இதனால் அதிர்ந்துபோன ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் , மகிரை குழந்தை நல உயர்சிகிச்சை பிரிவுக்கு , சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர் .

சனிக்கிழமை அன்று மகிறுக்கு ஸ்கேன் முடிவுகள் வெளிவந்தன , அதில் குழந்தையின் வலது கை அகற்றப்பட வேண்டும் என்ற அதிர்ச்சி தகவலை அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர் .

இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் , தவறான சிகிச்சையால் தான்   தங்களது குழந்தையின் கை பறிபோனதாக , ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் மீது குற்றம் சாட்டி பலதரப்பட்ட போராட்டங்களை   நடத்தினர் .

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று  மருத்துவர்கள் குழு , மகிரின் வலது கையை தோல்பட்டை வரை துண்டித்து , மேலும் மகிரை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வருகின்றனர் .

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் தேரனிராஜன் , பிறக்கும்போதே மகிர் 1.5 கிலோ எடையுள்ள குறைமாதக் குழந்தியாக தான் பிறந்துள்ளார் . தலையில்  ரத்தக்கசிவு காரணமாக இவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் , தற்போது பாக்டீரியல் தோற்று காரணமாக அவரது வலது கை நீக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here