விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக இருக்கலாம் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

5 Min Read
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக இருக்கலாம், ஒரு இறுக்கமான பேரம் பேசுவதற்காகவோ அல்லது திமுகவை மிரட்டல் தொனியாக கூட கடைப்பிடிக்கலாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எல் முருகன்,
தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்ற விநாயகர் சதுர்த்தி விழாக்கள் ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது எனவும் பாலகங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தின் போது இந்து மக்களிடம் ஒரு ஒற்றுமை வேண்டும், வெள்ளயனுக்கு எதிராக அணி திரள வேண்டும் என இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை தொடங்கி வைத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த அரசு எந்த அளவுக்கு இந்து விழாக்களை எவ்வாறு ஒடுக்குவதக்கு எத்தனிக்கிறார்கள் என முன்னாள் பேசியவர்கள் கூறியதாக தெரிவித்த எல்.முருகன் , அதிகாரிகள் மத்திய அரசின் அதிகாரிகளும் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும், அதை செய்யாத அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நாடு மிகவேகமான வளர்ச்சிபாதையில் சென்று கொண்டிருக்கிறோம்எனவும் ஜன சங்கத்தை தோற்றுவித்த சியாம் பிரசாத் முகர்ஜி, ஒரே நாடு ஒரே சட்டம் இருக்க வேண்டும் என காஷ்மீரில் தனது இன்னுயிரை கொடுத்தார் என கூறியவர், அவரது லட்சியத்தை நிறைவேற்றும் விதமாக நமது பிரதமர் காஷ்மீரில் 370 பிரிவை நீக்கி உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

எல்.முருகன்

பொது சிவில் சட்டம் உத்ரகாண்டில் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்த பாஜக கொடுத்திருந்த கொள்கைக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும்,திமுக, காங்கிரஸுக்ககு எதாவது கொள்கை இருக்கிறதா ? என கேள்வி எழுப்பியதோடு, ஆனால் நமக்கு கொள்கை இருக்கிறது எனவும் பொது சிவில் சட்டம் ஒவ்வொரு மாநிலமாக வந்துகொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாம் கோவில் கட்டமுடியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவரும் வழிப்பாட்டு உரிமையை கொடுத்திருக்கிறது ,அப்படி அடிப்படை உரிமையை கொடுத்திருக்கும்மோது , நாம் கொண்டாடும் விழாக்களுக்கு மட்டும் எதற்கு கட்டுப்பாடு? என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இருந்தால் நாம் கேட்க போவதில்லை, அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பேன் ஏன்னா உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதலமைச்சர்,
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா? வேண்டாமா? என கேளவி எழுப்பியவர், பாஜக வேல்யாத்திரை நடத்தும்போது ஓட்டுக்காக பயந்து வேல்-ஐ தூக்கினார் அல்லவா ஸ்டாலின், ஆனால் இன்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மனமில்லை எனவும் இதை நாம் தட்டிக் கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு ஆன்மீக பூமி எனவும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த பூமி எனவும் தற்போது எங்கு பாத்தாலும் எழுச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த எழுச்சி 2026 இல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எழுச்சியாக இருக்கிறது, இந்த ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என அப்போது தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அமைச்சர் எல். முருகன்,விநாயகர் சதுர்த்தி விழாக்கள் திமுக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய பயத்தை கொடுத்து இருக்கிறது எனவும், விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது எனவும் மக்கள் பாஜக-விற்கும் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இதனால் நான் தோல்வியை சந்தித்து விடுவோம் என்ற தோல்வி பயத்தால் தான் இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்து கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான கேள்விக்கு,
திமுகவுக்கு திருமாவளவன் ஏதாவது கோரிக்கை வைத்திருக்கலாம் அதை திமுக ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம், கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவை மிரட்டுவதற்கான தொனியாக, யுக்தியாகத்தான் தான் பார்ப்பதாக பதிலளித்தார்.

முதலமைச்சரை,! வெளிநாடு செல், என் பேச்சைக் கேள் என மிரட்டும் தொனியாக தான் தான் பார்ப்பதாகவும், திருமாவளவனே ஒரு சாதி சக்தி! தமிழ் மக்களுக்கான தலைவன் கிடையாது! ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான தலைவன் கிடையாது! அவர் ஒரு சமுதாயத்தின் தலைவர் ! அதனால் அவர் ஜாதியை பற்றி பேசுவதற்கு முன் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சாடிய எல்.முருகன், இன்று தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் பட்டி தொட்டிகள் எல்லாம் போதை பொருட்களான கஞ்சா மது புரையோடி போயிருக்கிறது. போதைப்பொருட்களை கடத்தி திமுகவினர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், மது ஆலைகளை நடத்துவது திமுகவின் பெரிய நிர்வாகிகள், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்ற கூறிவிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டாச்சு! இன்று மூலைமுடுக்கலாம் மனமகிழ் மன்றங்கள் என தனியாருக்கும் இருக்கும் டாஸ்மாக் கடைகளை கொடுத்து விட்டார்கள், தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பள்ளி இருக்கிறதோ இல்லையோ அங்கன்வாடி இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடை உங்களை அன்புடன் வரவேற்கிறது இன்றைக்கு தமிழ்நாட்டு நிலைமை அதுதான், தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் முப்பதிலிருந்து 35 இளம் விதைவைகள் இருக்கிறார்கள் எதற்கு யார் பொறுப்பு? திமுக தான் பொறுப்பு எனவும் இளைய சமுதாயத்தை கெடுத்து சீரழித்துக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு என்ன குற்றம் சாட்டினார்..

இந்த மது ஒழிப்பு மாநாடு வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக இருக்கலாம், ஒரு இறுக்கமான பேரம் பேசுவதற்காகவோ அல்லது மிரட்டல் தொனியாக கூட கடைப்பிடிக்கலாம் என விமர்சித்த அமைச்சர் எல் முருகன், விஜய் சாய்பாபா கோவிலுக்கு செல்வது ஓகே. ஆனால் விநாயகர் சதுர்த்தி என்பது உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் விழா. நீங்கள் ஒரு பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என விரும்புவர்கள் அனைத்து மதங்களின் அல்லது அனைத்து மக்களின் வழிபாட்டு விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது பொதுவாழ்வு இருப்பவர்களின் கடமை என அப்போது அவர் குறிப்பிட்டார்

Share This Article
Leave a review