மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் – எல்.முருகன்..!

3 Min Read

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது ஒன்றிய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்

மீதமுள்ள 2 மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். அதாவது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்

அதில் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ள ராஜ்யசபா எம்.பி.க்களில் ஒன்பது ஒன்றிய அமைச்சர்கள் உள்ளனர். இதில், பாஜக தலைவர் ஜேபி நட்டா (இமாச்சலப் பிரதேசம்), ரயில்வே, ஐடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), ஐடி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே (மகாராஷ்டிரா), கல்வி அமைச்சர் தர்மேந்திரா ஆகியோர் அடங்குவர்.

ஒன்றிய அமைச்சர் எல். முருகன்

தர்மேந்திர பிரதான் (மத்திய பிரதேசம்), சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோரும் அதில் இடம்பெற்றுள்ளனர். அதில் மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகும் என்றும், பிப்ரவரி 1-5-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20-ம் தேதி வரை தங்கள் பெயர்களை திரும்பப் பெறலாம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த மாதம் 29-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்

அதை தொடர்ந்து மாநிலங்களவைக்கு போட்டியிட உள்ளவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பாஜக தரப்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒன்றிய அமைச்சர் எல். முருகன்

இதில்,” தற்போது இணை அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன், உமேஷ் நாத் மகராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜர் ஆகியோர் மத்தியப் பிரதேசத்திலும், அதேப்போன்று தற்போது ரயில்வே அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்திலும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் சட்டப்பேரவை தேர்தலில், அமைச்சர் கயல்விழி செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதை தொடர்ந்து அவர், ராஜ்யசபா எம்பியாகி, ஒன்றிய அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் நீலகிரி எம்.பி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கு போட்டியிடுவதற்கான பணிகளையும் அவர் செய்து வந்தார். இந்த நிலையில், எல். முருகன், மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

இதன்மூலம் அவர் மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அண்ணாமலையும் போட்டியிட மாட்டேன் என்று கூறி வந்தநிலையில் எல்.முருகனும் போட்டியில் இருந்து விலகியுள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review