kovai : டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோவை மாநகர் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு..!

1 Min Read

கோவை மாவட்டம், அருகே லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது மது குடிக்க வரும் மது பிரியர்கள் குடித்து விட்டு தினசரி அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு சென்னை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் தகராறு ஈடுபட்டது இல்லாமல் மேலும் 3 நபர்களை குடித்த மது பாட்டில்களால் தாக்கி உள்ளனர்.

டாஸ்மாக் கடை

அப்போது அதில் காயம் அடைந்த நபர்களை உடனடியாக மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும் அதனால் பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என்றும் கடைகள் எதுவும் நடத்த முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மது பிரியர்கள்

இது குறித்து பலமுறை கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் மீண்டும் மனு கொடுக்க வந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

கோவை மாநகர் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார்

லங்கா கார்னர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் உயிர் பலிகள் ஏற்படும் அபாயம் நிழவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review