kovai : KMCH மருத்துவமனையில் ஒருவர் அடித்து கொலை – போலீசார் விசாரணை..!

2 Min Read

கோவை மாவட்டம், காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி (எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

ராஜா நேற்று அவினாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாக மருத்துவமனை செக்யூரிட்டிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை பிடித்து அடித்தாக தெரிகிறது.

KMCH மருத்துவமனை

அடித்ததில் அவர் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்த நிலையில் ராஜாவின் குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவை கொலை செய்து விட்டதாகவும், மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி உள்ளனர்.

ராஜாவின் குடும்பத்தினர்

இது குறித்து பேசிய ராஜாவின் மனைவி சுகன்யா அந்த மருத்துமனைக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறி விட்டு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் எதற்காக இந்த வழியில் வந்தாய் என்று எனது கணவரை கடுமையாக தாக்கி விட்டதாக தெரிவித்தார்.

பீளமேடு காவல் நிலையம்

மேலும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து 3 பேர் போலிஸ் என பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்து விசாரித்து, தன்னை புகைப்படம் எடுத்து சென்றதாக கூறினார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று தாங்கள் போராடியதாகவும் பின்பு தான் தனது கணவர் இறந்து விட்டார் என்று எங்களிடம் கூறியதாக தெரிவித்தார்.

ராஜாவின் மனைவி

மேலும் வீட்டிற்கு வந்த 3 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம், அதன் MD மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தற்போது மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை செக்யூரிட்டிகள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review