விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்தஸ்தகிர். இவரது மனைவி ஜீனத் பேகம் (வயது50) இவரது மகன் அப்துல் ரசாத் (24). இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் ஈ.சி. ஆர் சாலையில் சின்னமுதலியார் சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிரே சென்ற பைக் தீடிரென பிரேக் போட்டதால் பைக்கை அப்துல் ரசாத் வேகமாக நிறுத்தினார். பின்னால் அமர்ந்திருந்த ஜீனத்பேகம் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஜீனத் பேகம் மீது மோதியது.

இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மேலும் ஜீனத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சிசிடி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடமும், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.