காட்டாற்று வெள்ளம் கோதையாறு தரைப்பாலம் மூழ்கியது.

2 Min Read
தரை பாலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன. இதில் கோதையாறு தண்ணீர் தேக்கத்தில் நீர் மின்நிலையம் அமைந்துள்ளது. எனவே மின் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.மலையோர பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காட்டாற்று வெள்ளத்தால் கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு. பேருந்து சேவை நிறுத்தம்.

கோதையாறு

இந்த தரை பாலம் 16 மலையோர கிராமங்களுக்கு இடையே உள்ள போக்குவரத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் தரைப்பாலம் மூழ்கியதால் மலையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பல்வேறு மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராங்களுக்கு செல்ல கோதையார் அருகே உள்ள குற்றியார் தரைப்பாலம் வழியாக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கலிலும் , நடந்தும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் ஊரை விட்டு நகரங்களுக்கு செல்ல முடியும். அடிக்கடி மழை பெய்யும் போது காட்டாற்று வெள்ளதாலும் , கோதையார் நீர் மின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றும் நேரத்திலும் இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் கிராமங்களுக்கு உள்ளேயே முடங்கியும் வெளியே சென்ற மக்கள் ஊருக்கும் செல்ல முடியாமல் தவிப்பது வழக்கம்.

மூழ்கிய தரைபாலம்

இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மலை வாழ் மக்கள் பல ஆண்டுகளாக கொரிக்கை விடுத்து வந்தும் தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கன மழையில் காட்டாற்று வெள்ளத்தால் குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு துண்டிக்கப்பட்டது. அரசு பேருந்து சேவையும் நிறுத்தி உள்ளதால் மோதிரமலை, மாங்கா மலை, விளா மலை, குற்றியார், கல்லார், முடவன்பொற்ற, தச்சமலை உட்பட பல்வேறு மலையோர கிராமங்கில் உள்ள மலைவாழ் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழக அரசு இந்த பகுதிகளில் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.தேவையை பொருத்து மாவட்ட நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்கலாம் என மழை பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a review