இங்கிலாந்து நாட்டை கடந்த 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த இரண்டாம் எலிசபெத் வயதுமூப்பு காரணமாக கடந்த ஆண்டு தனது 96 வது வயடதில் உயிரிழந்தார் .
அவரது இறப்பிற்கு பின்பு ராணி 2 எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார் .
இருந்த போதிலும் அவருக்கான முடிசூட்டு விழா அதிகாரப்பூர்வமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை (இன்று) சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது மேலும் முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது .

இதனைத்தொடர்ந்து இன்று , லண்டனில் உள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில்மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழா நடைபெறும் பகுதி முழுவதிற்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது . மேலும் 70 ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முடிசூட்டு விழா என்பதால் நாடு முழுவது விழாக்கோலமாக காணப்பட்டது .
1953 ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிரகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நபர்களுக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டது அவர்கள் முன்னிலையில் இன்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது .
இன்று மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா பார்கர்க்கு முறையே முடிசூடுவதை முன்னிட்டு அவர்கள் இருவரையும் பாரம்பரிய முறைப்படி குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு ஊர்வலமாக கூடி கொண்டு வந்தனர் . கையில் செங்கோலை ஏந்தியபடி சார்லஸ் , மன்னருக்கான அரியணையில் அமர்ந்தார். இதேபோல் ராணி கமீலா பார்க்கரும் அவருக்கான அரியணையில் அமர்ந்தார் .

பிறகு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன் என மூன்றாம் சார்லஸ் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழாவில் பைபிள் வசனங்கள் வாசிக்கப்பட்டு பாரம்பரியமிக்க ஸ்பூனில் பிரத்யேக எண்ணெய் மன்னரின் தலையில் விடப்பட்டது.
பின்னர், மூத்த மத குருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட – சூப்பர்டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு , கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் மன்னரின் தலையில் சூட்டப்பட்டது. அதேவேளை இங்கிலாந்து ராணியாக அவரது மனைவி கமீலா பார்கருக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்பட்டது.
அப்பொழுது வாணவேடிக்கை வெடிகள் வெடிக்கப்பட்டது , மேலும் புதியதாக முடிசூட்ட பட்ட மன்னர் 3 ம் சார்ல்ஸுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .