மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை குஷ்பு கொச்சைப்படுத்தி உள்ளார் – அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்..!

2 Min Read
அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்

உரிமை தொகை பெறும் பெண்களை குஷ்பு கொச்சைப்படுத்தி உள்ளார் என அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என ஆணவ பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து பெண்கள், திமுகவினர் உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளிர் உரிமை தொகை பெறும் பெண்கள்

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து உள்ளன.

விமர்சித்த குஷ்பு

குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் திமுகவினர், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில்;- நடிகை குஷ்பு கோடி கோடியாய் சம்பாதித்தவர். அவருக்கு ஆயிரம் ரூபாய் என்பது டிப்ஸ் போன்றது.

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்

ஏழை குடும்பத்தினருக்கு சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல் ஆயிரம் ரூபாயை மகிழ்ச்சியாக நினைக்கின்றனர்.

டிப்ஸ் கொடுக்கும் அவர்களுக்கு. ஏழை மக்களின் உயிர் ஆதாரமாக, வாழ்வதற்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது அதை கொச்சைப்படுத்துவது அசிங்கம். இன்றைய தினம் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர்கள், உரிமை தொகையை உரிமையாக பெறுகின்றனர், பெருமையாக பெறுகின்றனர்.

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்

இப்படி ஒரு கோடியே 15 லட்சம் பெண்களை கொச்சைப்படுத்துவதாக குஷ்புவின் பேச்சு உள்ளது. இது என்னுடைய கருத்து. நமது முதல்வர் அண்ணன், தம்பி உரிமை தொகையை வழங்குகிறார். அந்த உரிமைத்தொகை வழங்குவதை பாராட்ட வேண்டும்.

அவர்களுக்கு பாராட்ட மனமில்லாமல் இதுபோன்று கொச்சைப்படுத்துகின்றனர். அப்போது வலிமையான கூட்டணியை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார். மேலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எங்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளது பெண்களின் ஆதரவு உள்ளது அதை கண் கூடாக பார்க்கிறீர்கள், என்றார்.

Share This Article
Leave a review