கேரளா வெடிகுண்டு விபத்து : சூட்லி எனப்படும் கயிறு வகை நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதா ?

3 Min Read

களமசேரி குண்டுவெடிப்புக்கு கயிறு  மற்றும் பெட்ரோலால் தயாரிக்கப்பட்ட  நாட்டு வெடிகுண்டு ரக வெடிகுண்டுதான் காரணம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி குண்டுவெடிப்பு பகுதியை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில், சாதாரண ரக பட்டாசு வெடியையும், சுமார் 7-8 லிட்டர் பெட்ரோலையும் பயன்படுத்தி வெடிகுண்டை உருவாக்கியது தெரியவந்துள்ளது.

இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் மொபைல் போனின் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அதாவது இந்த குண்டுவெடிப்பை திட்டம்தீட்டிய மார்ட்டின் 400-500 மீட்டருக்குள் இருந்து குண்டை வெடிக்க செய்திருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .

இந்த புதிய தகவல்கள் கேரள போலீஸ் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புலனாய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இது ஒரு “சுட்லி வகை ” வெடிகுண்டு, பட்டாசு மற்றும் பெட்ரோலில் இருந்து வெடிபொருட்களைப் பயன்படுத்தி உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது .

வெடிகுண்டுவுடன் இணைக்கப்பட்ட மொபைல் ஃபோன்நிற்கு அழைப்பு விடுத்தது ரேடியோ-அதிர்வெண் தூண்டுதல் மூலம் இந்த வெடிவிபத்தனை நிகழ்த்தியுள்ளனர் . எனவே மின் ஆற்றலையும் மற்றும் IED (மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம்) தூண்டுவதற்காகவும் மொபைல் ஃபோன் அழைப்பை மேற்கொள்ள மார்ட்டின் சம்பவ பகுதியின் அருகாமையிலேயே இருந்திருக்க வேண்டும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது .

கேரளாவில் சில இலட்சம் நம்பியாளர்களை கொண்ட யெகோவாவின் சாட்சிகள் என்ற கிருஸ்துவ அமைப்பின் மூன்று நாள் ஜெப கூட்டத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் கொச்சிக்கு அருகில் உள்ள கலமசேரியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்றமுக்கிய குற்றவாளியான மார்ட்டின் போலீசில் சரணடைந்தார், யெகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பு கடந்த சில வருடங்களாக “தேச விரோதம் மற்றும் தேசத்துரோக” செயல்களில் ஈடுபடுபட்டு வந்ததால் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக அவர் காவல் துறையிடம் தெரிவித்துள்ளார் .

மார்ட்டின்  “சுட்லி” வெடிகுண்டு என்று அழைக்கப்படும் நாட்டு வெடிகுண்டை இணையத்தில் இருந்து தயாரிக்க கற்றுக்கொண்டதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் .

“சுட்லி” அல்லது கயிறு வெடிகுண்டுகள் இந்தியாவில் விழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது பிரபலமான ஒன்றாகும் , மேலும் இவற்றை செய்ய தேவையான வெடிபொருட்கள் எளிதில் கிடைக்க கூடியவை .

2018 ஆம் ஆண்டில், ISIS பயங்கரவாதக் குழுவால் நிகழ்த்தப்பட இருந்த இதுபோன்ற சுடலை வெடிவிபத்தை கூட்டாட்சி பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பினர் முறியடித்தனர் .

பயங்கரவாதக் குழுவான இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தினர், இணையத்தில் உள்ள வீடியோக்களைப் பயன்படுத்தி ‘சுட்லி’ வெடிகுண்டு தாக்குதலை நடத்த முயன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

குண்டுவெடிப்பை நிகழ்த்தியதன் நோக்கம் குறித்து மேலும் அறிய, மார்ட்டினை கேரள காவல்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் .

கேரள காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட பிருவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால் , என்ஐஏ விரைவில் குற்றவாளி மார்டினை அவர்களது காவலில் எடுத்து விரிவான விசாரணையை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

மார்ட்டினின் பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்தும் அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில் யெகோவாவின் சாட்சிகளின் பிராந்திய செய்தித் தொடர்பாளர் டி.ஏ.ஸ்ரீகுமார், மார்ட்டின் அமைப்பின் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர் அல்ல என்று கூறினார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ஜெப கூட்டத்தில் சுமார் 2,300 பேர் கலந்துகொண்டதாக அவர் கூறினார் .

Share This Article
Leave a review