ஒடிசாவில் ஏற்பட்டுள்ள மூன்று ரயில்கள் விபத்து காரணமாக 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டமும் ரத்து.
ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
கருணாநிதி நினைவிடம், சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என அறிவிப்பு.
ஒடிசா ரயில்கள் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 233 ஆக உயர்வு! – மேலும் 900 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் ஒடிசா தலைமை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் பல மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மூன்று மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லவிருக்கும் நிலையில். தமிழகத்தைச் சார்ந்த 800 க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்திருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.