ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சேனாதிபதி தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை எனவும் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் ரத்து செய்யப்படாது எனவும் உத்தரவு தெரிவிக்கப்பட்டிருந்தது .

இது குறித்து பேட்டியளித்த காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும் அயலக தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதற்காக எத்தனையோ பேர் சட்டரீதியாக போராடி வந்ததாகவும் அதில் சிறிய அளவு தான் பங்கு செலுத்தி இருப்பது தற்போது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும் , 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும் 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட விவரங்களை கேட்டு அதில் வெற்றி பெற தேவையான வாதங்களை முன்வைத்ததாகவும் தற்போது தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்க கூடியதாகவும் தெரிவித்துள்ளார்.