காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா : சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை !

2 Min Read
முண்டந்துறை புலிகள் காப்பகம்

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 8 -ந் தேதி வரை 9 நாட்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ,மாஞ்சோலை மற்றும் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு .

- Advertisement -
Ad imageAd image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கி, பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல், சங்கிலியால் அடித்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி கடந்த 22 -ந் தேதி திருவிழா தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை அன்று வருகிற ஆகஸ்ட் 4 -ந் தேதி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

மணிமுத்தாறு அருவி

இதையொட்டி சுமார் 200 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணிகள், குடில்கள் அமைக்கும் இடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் நுழைவாயில், மேற்கூரை உள்ளிட்ட பகுதியில் வர்ணம் பூசுதல், சீரமைப்புகள், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

மாஞ்சோலை தேயிலை தோட்டம்

இத்திருழிவில் நேர்த்திக்கடன் செலுத்த ஆயிர கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்க படுவதால் , விபத்து மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க , மாவட்ட காவல் , போக்குவரத்து காவல் , தீயணைப்பு மற்றும் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்திய நிலையில் , முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை 9 நாட்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் , மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேபோல் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் வனத்துறையினர் சார்பாக பாபநாசம் வனச்சோதனை சாவடியிலும் வைக்கப்பட்டு உள்ளது..

Share This Article
Leave a review