கன்னியாகுமரி முதல் சென்னை வரை இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இறுதி கட்டமாக நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி வரை புதிய தண்டவாளத்தில் சுமார் 7.05 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு நிமிடத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக தென்னக ரயில்வே அறிவித்தனர்.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை இரட்டை ரயில் பாதை திட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அதில் சென்னை முதல் மதுரை வரை ஏற்கனவே பணிகள் முடிவடைந்து ரயில்களும் புதிய தண்டவாளத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு இரண்டு கட்டங்களாக பணிகள் நடைபெற்றது. மதுரை மணியாச்சி தூத்துக்குடி 159 கிலோமீட்டர் தூரத்திலும் பணிகள் நடந்தது.

இதேபோன்று மணியாச்சியிலிருந்து நெல்லை மார்க்கமாக நாகர்கோயில் வரை 102 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பணிகள் நடந்தது. இந்த நிலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமை பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அப்போது இறுதி கட்டமாக நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி வரை சுமார் 7.05 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு நிமிடத்தில் புதிய தண்டவாளத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு சோதனை ரயில் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.